உணவிற்காக பக்காவாக பிளான் போட்டு பூனையை ஏமாற்றி காகங்கள்… நேர்மையா வாழ்றவனுக்கு காலமே இல்ல போல..!

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே பகிர்ந்து உண்ணுதலில் காகம் தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒரு உணவு ஒரு இடத்தில் இருந்து கிடைத்தாலே காகம் கா…கா எனக் கத்தி அனைத்து காகங்களையும் அழைத்துவிடும்.

இங்கேயும் அப்படித்தான். ஒரு பூனை வழியில் கிடந்த ஒரு உணவை தன் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு காகம் அங்கே வந்தது. அந்த காகம், பூனையின் முதுகில் குத்தியது. உடனே பூனை அதை நோக்கி சீறிப் பாய்ந்தது. அந்த நொடியில் இன்னொரு காகம் வந்து அந்த உணவை எடுத்துவிட்டுப் போய்விடுகிறது. இருந்தாலும் நேர்மையாக இருந்தாலும் சாப்பிடும் சாப்பாடும் கூட பறிபோய்விடும் போலருக்கே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed