சாலை போட இடையூறாக இருந்த வீடு.. கடைசிவரை வீட்டைக் கொடுக்காத பெண்… இறுதியில் நடந்த சம்பவத்தை நீங்களே பாருங்க..!

பொதுவாக சாலை போடப்படும் போது அந்த வழியில் இடையூறாக சில வீடுகளோ, சில கட்டிடங்களோ இருக்கும். அவை அரசுக்கு சொந்தமானதாக இருந்தால் அவை சாலைப்பணிக்காக இடித்து அகற்றப்படும். அதுவே, தனியாருக்கு சொந்தமான கட்டிடமாக இருந்தால் அந்தக் கட்டிடத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அந்த இடத்தை அரசு சாலைப்பணிக்காக எடுக்கும்.

சீனா நாட்டில் நெடுஞ்சாலை அமைக்க அந்நாட்டு அரசு தனியார் கம்பெனியிடம் திட்டத்தை ஒப்படைத்து இருந்தது. அந்த சாலையில் இருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து ரோடு போட ஆயுத்தமாகிவிட்டாலும் வெறும் 40 சதுர மீட்டர் பரப்பு கொண்ட ஒரு சிறிய வீட்டை மட்டும் அந்த வீட்டின் உரிமையாளர் பெண் விட்டுத் தரவில்லை. லியாங் என்ற அந்த பெண்ணிடம் பலமுறை பேசியும் அவ்ர் வீட்டை விற்க சம்மதிக்கவில்லை. அந்த வீட்டுக்கு இருமடங்கு தொகை, அதற்குப் பதிலாக புதிய பிளாட் என ஒதுக்கியும் அந்த பெண் சம்மதிக்கவில்லை. பத்து ஆண்டுகள் தொடர்ந்து தன் வீட்டை தக்கவைக்க போராடிக் கொண்டே இருந்தார் அந்தப் பெண்.

இதனால் அந்த பெண்ணின் 40 சதுர அடி வீடு மட்டும் அப்படியே இருக்கும்படி விட்டுவிட்டு அந்த சாலை அந்த இடத்தில் சுற்றிச் செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. விடாத ஒரு பெண்ணின் போராட்டம் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.

You may have missed