BB-8ல் போட்டியாளர்கள் அதிர்ச்சி.. முதல் நாளிலே வீட்டை விட்டு வெளியேற்றமா.. யாரென்று தெரியுமா..?

விஜய் டிவி யில் கடந்த 7 வருடமாக உலகநாயகன் கமல்காசன் தொகுத்து வெற்றி கரமாக நடைபெற்று முடிந்த ஷோ தான் பிக் பாஸ். தற்போது இந்த வருடம் பிக் பாஸ் 8-ஐ விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி நேற்று விஜய் சேதுபதி அவர்களின் தொகுப்பில் BB-8 கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இதில் ஐஸ்வர்யா, அன்ஷிதா, தர்ஷிகா, ஜனனி, பரினா, ஜாக்லின் போன்ற 18 போட்டியாளர்கள் பிபி 8 வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்த உடனே வீட்டில் ஒரு பகுதி ஆண்களுக்கும் மறுபகுதி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிவுபெரும் தருனையில் முதல் எலிமினேஷன் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனில் சாச்சனா அவர்கள் வெளியேறி உள்ளார்.இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து பிரபலமானவர். இரண்டாவது போற்றியாளராக வீட்டினுள் வந்த முதல் நாளிலே எலிமினேஷன் ஆனது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.