பசுவின் வயிற்றை சோதித்த போது டாக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி… என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்..!
பசு ஒன்றுக்கு சிகிட்சையளித்த கால்நடை மருத்துவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிருக்கிறார்கள். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான மாடு ஒன்று சாணம், சிறுநீர் என இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளது.
உடனே அவர் மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனாட். வேப்பேரி கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கழிவுப்பொருட்கள் தேங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். உடனே ஆப்ரேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஐந்தரை மணிநேரம் ஆப்ரேசன் நடந்தது.
பசுவின் வயிற்றில் கழிவாக இருந்தது அத்தனையும் பிளாஸ்டிக். அது 52 கிலோ எடை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பசுவின் இரப்பையில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் தங்கி இருந்திருக்கிறது. அதை மருத்துவர்கள் அகற்றினர்.
ஐந்தறிவு படைத்த பசு சாப்பிட்டது இருக்கட்டும். ஆறு அறிவு படைத்த நாம் சிதறிவிட்ட பிளாஸ்டிக் தானே இத்தனை பெரிய துயருக்கு காரணம்?