இன்னும் பயிற்சி வேண்டுமோ… குட்டையை எப்படி கடக்க வேண்டும் என சொல்லி கொடுத்தவருக்கு நடந்த சம்பவத்தைப் பாருங்க…

ஆழம் தெரியாமல் காலை விடாதே என கிராமப் பகுதியில் பழமொழி சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே எந்த இடத்திலும் ஆழம் தெரியாமல் கால் வைக்கக் கூடாது. அதிலும் விவசாயத்தைப் பொறுத்தவரை வயல்வெளிகளைப் பற்றித் தெரியாதவர்கள் அதன் வாய்க்கால்களில் கூட நடக்கமுடியாது. அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். பேண்ட், சர்ட் அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் வயல்வெளியில் நடந்து போனார். அப்போது இடையில் ஒரு குட்டை கிடந்தது. அது ஒரு மிகவும் சின்னக் குட்டை. அந்தக் குட்டையை கிராஸ் செய்யும் நோக்கத்தில் அவர் அதை கடக்க முயன்றார்.

அப்போது செருப்பில் லேசாக சகதி பட்டது. இதனால் செருப்பைக் கையில் தூக்கிவைத்துக்கொண்டு தாவிக்குதித்தார். ஆனால் அவர் குட்டை ஆழம் குறைவாக இருக்கும் என நினைத்து அப்படிச் செய்தார். ஆனால் மொத்த குட்டைக்குள்ளும் அவர் மூழ்கிவிட்டார். இதை அவரது நண்பர் ஒருவர் கேஸ்வலாக வீடியோ எடுக்க அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

You may have missed