மனிதர்களின் அறிவையே ஓவர்டேக் செய்த காகம்.. அரசியல்வாதிகளையே மிஞ்சிய அறிவு.. நீங்களே பாருங்க..!
பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.
அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த காகம் தன் வாயில் ஒரு சின்னதுண்டு காகிதத்தை எடுத்துக்கொண்டு ஒரு குளக்கரையில் காவல் நிற்கிறது. அந்த குளத்திற்குள் அந்த காகிதத்தைப் போடுகிறது. தங்களுக்கான ஏதோ உணவு தான் போடப்படுவதாக நினைத்து மீன்கள் ஓடிவருகிறது. தனக்குப் பிடிக்காத மீன்கள் வரும் போது காகம் பேப்பரை எடுத்துவிடுகிறது. தனக்குப் பிடித்த, தன் வாய் அளவுக்கு போதுமான ஒரு குட்டி மீன் வரும்போது பேப்பரை போட்டது. மீன் அதன் பக்கத்தில் வர ஒரே கவ்வில் மீனைக் கவ்விப் பிடித்து சாப்பிட்டது காக்கா..
அரசியல்வாதிகள் தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்களையே இந்த காகா மிஞ்சிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.