தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…!

லிட்டில் பிரின்சஸ் செய்யும் லீலைகள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர்கள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பு தன் வீட்டில் உள்ள அனைவரிடமும் பிரிய விடை கொடுத்த சம்பவங்கள் சமூக வலைதளவாசிகளையும் கண் கலங்க வைக்கும்.

பிறந்தது முதல் திருமணம் முடியும் வரை வீட்டில் குட்டி இளவரசி போல் வீட்டை அலங்கரித்து மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும், உடன் பிறப்புகளுடன் சண்டை சச்சரவு என்று பஞ்சாயத்துகள் என்று வீட்டில் கலகலப்புக்கு காரணமாயிருப்பார்கள் லிட்டில் பிரின்சஸ். அம்மாவுடன் சண்டை பிடித்து அப்பாவுக்கு ஆதரவு அளித்து அண்ணண்களை வீட்டில் போட்டு கொடுத்து அவர்கள் செய்யும் குறும்புகளை ஏற்றுக்கொண்டு, தமிழ் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், ஒழுக்கத்தையும் சிறு வயதில் இருந்தே கற்று கொடுத்து ஒரு பண்புள்ள நல்ல மகளாக பெண் குழந்தையை வளர்ப்பார்கள் பெற்றோர்கள்.

வீட்டில் அண்ணன் தங்கை உறவு, அக்கா தம்பி உறவு என்றும் மனதில் இருக்கும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத பாசம். வீட்டில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் செல்ல சண்டை போட்டிருந்தாலும், திருமணம் முடித்து வீட்டில் இருக்கும் உறவுகளிடம் விடை பெற்று போகும் நேரத்தில் கலங்காத நெஞ்சங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் மணப்பெண் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு புறப்படும் நேரத்தில் அனைவரின் மனதிலும் சந்தோசம் கலந்த துயரம் கலந்திருக்கும். லிட்டில் பிரின்சஸ்-ஆக வாழ்ந்து வந்த நம் மகள் புகுந்த வீட்டில் எப்படி நடத்துவார்களோ என்ற பயம் கலந்த எண்ணம் இருக்கும். கண்ணீர் வரவழைக்கும் பிரியா விடை பெற்ற காட்சிகள் இணையத்தை கலங்க வைத்துள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed