தாய் எருதை தாக்க வந்த யானை.. பதிலுக்கு தலை தெறிக்க ஓடவிட்ட குட்டி கன்று… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!
யானை என்றாலே கம்பீரம் தான். அதன் நீளமான கொம்புகளைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் பயம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது யானைக்கு ரொம்பப் பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு கொம்பன் யானையையே ஒரு கன்று குட்டி விரட்டியடித்த வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், யானை ஒன்றை கன்றுக்குட்டி விரட்டிச் செல்கிறது. அதைப் பார்த்த தாய் எருது முதலில் மிரண்டு போனது. தொடர்ந்து தன் குட்டியை காப்பாற்ற அதன் பின்னாலேயே ஓடுகிறது. கடைசியில் அந்தக் கன்றுக்குட்டி யானையை விரட்டிவிட்ட பின்பே தன் தாய் எருதுடன் போனது. இந்த வீடியோவை பாருங்கள். நீங்களும் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
With great power comes great responsibility. Learn it from this elephant while he is being chased by a kid water buffalo. Video from SM. pic.twitter.com/G7UivT8gBf
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 6, 2020