பொம்மைக்கும் சேர்த்து ஆபரேஷன் செய்த டாக்டர்கள்… காரணம் தெரியுமா..?
மருத்துவமனையில் ஒரு பொம்மைக்கு காலில் கட்டுப்போடப்பட்டு குழந்தை பக்கத்தில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்
டெல்லியை சேர்ந்த ஒரு வயதே ஆன குழந்தை ஜிக்ரா மாலிக். இக்குழந்தையை கட்டிலில் வைத்துவிட்டு, அதன் தாயார் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மெத்தையில் இருந்து குழந்தை தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தது. உடனே குழந்தையை அதன் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டு குழந்தை வீல்…வீலென அழுதுகொண்டே இருந்தது.
மருத்துவர்கள் சமாதானம் செய்து சிகிட்சைக்கு முயன்றும் குழண்டை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் சிகிட்சை செய்ய முடியாமல் மருத்துவர்கள் தவிப்பதைப் பார்த்த குழந்தையின் தாய் ஃபரீன், குழந்தைக்கு மிகவும் பிடித்த யாரி என்ற பொம்மையைக் கொண்டுவந்தார். உடனே மருத்துவர்கள் முதலில் அந்த பொம்மைக்கு சிகிட்சை அளிப்பதுபோல் காலில் கட்டுப் போட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து மருத்துவர் அஜய்குப்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தை ஜிக்ராவுக்கு சிகிட்சையளிக்க, பொம்மைக்கு சிகிட்சை செய்வதை பார்த்த குழந்தை சப்தமே இல்லாமல், சமத்தாக சிகிட்சைக்கு ஒத்துழைத்துள்ளது. இப்போது இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.