இந்த நாய்க்கு இருக்கும் புத்திய பாருங்க… மார்க்கெட்டில் பேரம் பேசி பழங்களை வாங்கும் நாய்..!

செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

பாம்பை கடித்துக் கொன்று தானும் இறந்து போன நாய் தொடங்கி, தங்கள் உரிமையாளர்களுக்காக உயிரையே விட்ட பலரைப் பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பில் பூனைக்கு முக்கிய இடம் உண்டு. பூனை அதிகளவில் பலராலும் விரும்பப்படும் செல்லப் பிராணியாக இருக்கிறது. பொசு, பொசுவென பார்க்க அழகாக இருப்பதால் பூனையை பலருக்கும் பிடிக்கும். அதேபோல் பலரும் செல்லப்பிராணி என்றாலே நாய் வளர்ப்புக்குத் தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இங்கேயும் ஒருவர் தன் வீட்டில் பாசமாக ஒரு நாய் வளர்த்து வந்தார்.அந்த நாய் அந்த வீட்டு உரிமையாளர் அதாவது தன்னை வளர்க்கும் எஜமான் சொல்லும் அனைத்து வேலைகளையும் அழகாகச் செய்து அசத்தும். தினமும் அதுவே பழக்கடைக்குப் போய் பழம் வாங்கி வருகிறது. கடைக்காரம்மா கொடுக்கும் மிச்ச சில்லரையையும் அதுவே பெற்றுவருகிறது. கூடவே மனிதர்களைப் போலவே அந்தக் கடையில் பேரம் பேசி பழங்களை வாங்குகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். வீடியோ இதோ..