தன் எஜமான் ரொம்ப கஷடப்படுறாருன்னு இந்த நன்றியுள்ள ஜீவன் செய்ததை பாருங்க..!
நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள்.
அதிலும் வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்த்தால் தெருநாய்கள் குரைப்பதும், ஒரு தெருவில் இருந்து அடுத்தத் தெருவுக்கு புதுவரவாக எதுவும் நாய் வந்துவிட்டால் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து நாய்கள் சேர்ந்து குரைத்தே விரட்டுவதையும் பார்த்திருப்போம். அதனால் தான் யாரேனும் ஒருவரை திட்டினால் கூட ‘சூரியனைப் பார்த்து நாய் குழைப்பதைப் போல’ என பகடியாகச் சொல்கிறோம். அந்த வகையில் இங்கேயும் ஒரு நாய் செய்த செயல் செம வைரலாகி வருகிறது.
பழைய இரும்புக்கடைக்காரர் ஒருவர் தன் கடையில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாயானது, ஓனரின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தது. இந்நிலையில் தான் தனது எஜமான் பழைய இரும்பு சாமான்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதை அந்த நாய் கவனித்தது. உடனே ஓடிப்போய் அந்த நாய் உதவி செய்ய அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு சோறு போட்டவரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அந்த நாய் நினைத்த செயல் பரவலாக வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனக்கு சோறு போடும் முதலாளிக்கு உதவனும் என்கிற மனசு இருக்கே அதுதான் சார்…🙏 pic.twitter.com/b58qQb6wFX
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) February 8, 2021