நடிகர் ஜெமினி கணேசனின் மகளா இது? மருத்துவ உலகில் இவர் செய்த சாதனையை பாருங்கள் வியந்து போவீர்கள்..!
தமிழ்த்திரையிலகில் தனக்கென தனிப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் ஜெமினி கணேசன். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்திலேயே தன் நடிப்பால் கவனிக்க வைத்தவர். இவருக்கு காதல் மன்னன் என்னும் அடைமொழியும் உண்டு.
இந்த ஜெமினி கணேசனின் மகள் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இப்போது வெளியாகி உள்ளது. இவர் பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா ஆவார். மெடிக்கல் துறையில் இவர் ரொம்பவும் பிரபலம். பள்ளிக்கூடப் படிப்பை சென்னையில் முடித்தவர், தொடர்ந்து கர்நாடகா மாநிலம், கஸ்தூரி பா மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்தார். தொடர்ந்து சென்னை மெடிக்கல் காலேஜில் எம்.டி படித்தார்.
ஜெமினியின் மகளான கமலா தான் கடந்த 1990 ஆம் ஆண்டில் முதன் முய்ஜலில் டெஸ்டியூப் பேபியை உருவாக்கினார். இதன் மூலம் பிள்ளைபேறு இல்லாமல் தவித்தவர்களுக்கு டெஸ்டியூப் பேபி மூலம் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தைக்கும், இவர் பெயரைக் குறிக்கும்வகையில் கமலா என்றே அந்தத் தம்பதியினர் பெயர் சூட்டினர். அதேபோல் கமலா டாக்டர் தாயாக நானிருப்பேன், மன அமைதிக்கு உதவும் ஆன்மீகம் ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவர் டெஸ்டியூப் பேபிகளுக்கான ஆய்வு மையத்தையும் 1989 ஆம் ஆண்டே உருவாக்கினார். வாடகைத்தாய் என்னும் கான்செப்டை உருவாக்கி பலருக்கு குழந்தைப்பேறு கிடைக்கச் செய்ததும் இவர்தான். ஜெமினி கணேசனின் மகளி இந்தத் திறமை பலரது கவனத்தையும் குவித்துவருகிறது.