விமானத்திலிருந்து இறங்கி நடக்க முடியாமல் வந்த பெண்.. அதன் பின் போலீசார் X-ray வில் கண்ட காட்சி.!
எள்டரோடா விமானநிலையம் அது. வழக்கம் போலவே பரபரப்பாக காணப்பட்டது வழக்கமான சோதனைகளுக்கு பின்பு அனைவரையும் விமானநிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். கொலம்பியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அந்த விமான நிலையத்திற்கு வந்தார் அவர் கடுமையான கால் வலியோடு நடக்க முடியாமல் வருவதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அவரது அருகில் சென்றனர்.
ஆனால் அவரோ அவர்களை பார்த்ததும் பயந்து நடுங்கினார். இதனால் அவரை சந்தேகப்பட்டு சோதனை செய்தனர் அப்போது அவரது தொடைப்பகுதியில் தையல் போடப்பட்டிருப்பது தெரியவந்ததது.
தொடர்ந்து அவரை x ray சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவரது தொடையில் தோலுக்கும் சதைக்குமான இடைப்பகுதில் ஒரு பை வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து பையை அகற்றினர். அப்போது பையில் திரவ கொக்கைன் எனும் திரவப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போயினர். இப்படியெல்லாம் கடத்தப்புறப்பட்டு விட்டார்களே என தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர், ஆனால் அவரோ அந்த பெண் தானாகவே தொடையை கிழித்து உள்ளே வைத்திருப்பதாகவும் இன்னும் சிறிது நேரம் வைத்திருந்தால் அவரது ரத்தக்குழாயை பாதிக்கச்செய்து உயிரையே பறித்திருக்கும் என அதிகாரிகளிடம் எச்சரித்தார். அந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 40000 டாலர்களாம்.