கட்டிப்பிடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.. இவ்வளவு நாள் இது தெரியாமப்போச்சே…!
கட்டிப்பிடிப்பது வெறுமனே காமத்தின் அறிகுறி மட்டுமே அல்ல. அது சிலநேரங்களில் ஆதரவாகவும், அணுசரணையாகவும் கூட வெளிப்படும். ஆணும், பெண்ணும் தான் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இல்லை. அன்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் ஒரே பாலினத்தவர்கள் கூட பரஸ்பரம் கட்டிப்பிடித்துக் கொள்வதைப் பார்த்திருப்போம்.
இவ்வளவு ஏன், பதமஸ்ரீ கமலஹாசன் நடிப்பில் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செம பேமஸ் ஆனது. சரி, இனி விசயத்துக்கு வருவோம். கட்டிப்பிடிப்பதில் என்னவெல்லாம் அர்த்தம் இருக்கிறது? எனப் பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாகவே நாம் நமது துணையை அணைக்கும்போது ஆழ்மனதில் இருந்து இதமான உணர்வு உண்டாகும். கட்டிப்பிடிக்கும் நொடியில் புதுவித உணர்வு ஏற்படும். எதிர்பாலினம் என்று இல்லை. நமக்கு இஷ்டமான யாரைக் கட்டிப்பிடித்தாலும் இந்த நிலை ஏற்படும். தாம்பத்தியத்திற்கும் கட்டிப்பிடித்தலே தொடக்கப்புள்ளி. பொதுவாக கட்டிப்பிடிக்கும் போது நம் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கும்.
இது தாம்பத்திய உறவைப் பலப்படுத்தும். இதேபோல் தினமும் கட்டிப்பிடிப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். பொதுவாகவே கட்டிப்பிடித்தல் தொடர்பாக ஒரு ஆராய்ச்சி நடந்தது. இதில் ஆண்கள் தாம் பெரும்பாலும் கட்டிப்பிடித்தலை தொடங்கி வைப்பதாகச் சொல்கின்றனர். அது என்னவோ உண்மை தானே பாஸ்?