இரண்டு குழந்தைக்கு அம்மான்னா நம்பவே மாட்டாங்க.. தற்போதைய இளம் நடிகைகளை கதறவிடும் ஜெனிலியாவின் போட்டோ சூட்..!
நடிகை ஜெனிலியாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவையில்லை. அவரது முதல்படமே பிரமாண்ட இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் தான். அந்த ஹிட்டிலேயே தொடர்ந்து பயணித்த ஜெனிலியா விஜயோடு சச்சின் படத்தில் நடித்தார். ஜெயம் ரவியோடு சேர்ந்து ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஹாசினி பாத்திரம் வெகுவாகவே பேசப்பட்டது.
வெள்ளந்தியான பெண்ணாக ஹாசினி என்னும் பாத்திரம் இன்றும் ஜெனிலியா குறித்த பிம்பமாய் ரசிகர்கள் மத்தியில் தங்கி நிற்கிறது. ஜெனிலியா பீக்கில் இருந்தபோதே ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்துகைப்பிடித்தார். அதன் பின்னர் சினிமாத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்தவருக்கு இப்போது இருகுழந்தைகள் உள்ளனர். இப்போது அவரது கணவரே தயாரித்திருக்கும் சொந்தப்படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் ஜெனிலியா. இதன் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸிற்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறார் ஜெனிலியா.
அம்மணி அதே கனவோடு சமீபத்தில் ஒரு போட்டோ சூட்டும் நடத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் ஆத்தி..ஜெனிலியாவா இது? சான்ஸ்சே இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்னால் எப்படி இது? என ஷாக்காகி இருக்கின்றனர். நீங்களே அந்த புகைப்படத்தைப் பாருங்களேன். அப்படித்தான் சொல்வீர்கள்.
புகைப்படம் இணைப்பு கீழே…
pic1
pic2
pic3