வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திகை தீபம் சீரியல் அர்த்திகா.. வெளியான தகவல்கள்..!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெற்ற சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியல் பார்ப்பதற்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. மேலும் இந்த சீரியல் தான் டி ஆர் பி ரேடிங்கிளையும் முதல் இடத்தில இருந்தது. மேலும் இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் அர்த்திகா தான் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்திருந்தார்கள். மேலும் அர்த்திகாக்கு இது தான் முதல் சீரியல். முதல் சீரியலில் இவருக்கு பெரிதளவில் வெற்றி கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் இவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலில் இவர்கள் இருபரின் காதல் காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் அர்த்திகா இறந்தது போன்று ஒரு காட்சி வைக்கப்பட்டு சீரியல் முடிக்கப்பட்டது. இப்போது பாகம் 2 ஆரம்பிக்க இருக்கிறது. அதுவும் கிராமத்து கதை களத்தில் ஆரம்பிக்கிறது. இதனை காண்பதற்கு மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு உள்ளனர். பாகம் 2 ஆரம்பிக்க பட்ட நிலையில் அர்த்திகாவை  தவிர பாகம் 1 ல் நடித்த அனைவரும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக வேற ஒருவர் களம் இறங்குகிறார். மேலும் இது குறித்து பல வதந்திகள் வந்தன. அதாவது அர்த்திகா திருமணம் முடிந்ததால் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து விட்டார் எனவும் மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் எனவும் பல வதந்திகள் வந்தன.

அந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்த்திகா ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது திருமணம் முடிந்ததால் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து விட்டார் எனவும் மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் எனவும் பல வதந்திகள் தப்பு தப்பாக வந்தன அது அனைத்தும் பொய் எனவும் மேலும் நடிக்க வந்த பிறகு எந்த ரொமான்ஸ் காட்சியாக இருந்தாலும் இயக்குனர் சொன்னால் நடித்து தான் ஆக வேண்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் நான் கர்ப்பமாக இல்லை அப்படி கர்ப்பமாக இருந்தால் முதலில் உங்களிடம் தான் கூறுவேன் எனவும் அவர் பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may have missed