விபத்தினால் கைகளை இழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்ட ஆணின் கைகள்.. அடுத்து சில நாட்களில் நடந்த அதிசயம்…
விபத்து ஒன்றில் தனது கைகளை இழந்த பெண்ணுக்கு, அண்மையில் இறந்துபோன அவரின் உறவுக்காரர் ஒருவரின் கைகள் பொருத்தப்பட அடுத்து நடந்த அதிசயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அப்படி என்ன நடந்தது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 18 வயது ஆனா ஸ்ரேயா சித்தனா கவுடர் என்னும் பெண் பேருந்து விபத்து ஒன்றில் தன் இரண்டு கைகளையும் இழந்தார். பொதுவாக கண் தான, இரத்ததானம் உள்ளிட்டவை குறித்து ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வினால் அவை கிடைத்தாலும், கைகள் அத்தனை எளிதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் ஸ்ரேயா சித்தனா கௌடரின் உறவினர் ஒருவர் அண்மையில் இறந்து போனார். ஆணான அவரின் கைகள் அவரது குடும்பத்தின் சம்மதத்துடன் கையை இழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. இதில் அந்தப்பெண்ணின் மேல் பொருத்திய அந்த கைகள் அடர்த்தியான முடியுடனும், கருமை நிறமாகவும் இருந்தது. ஆனால் சில நாள்கள் செல்ல, செல்ல இயல்பாகவே அவரது கை பெண் கைகளைப் போலவே மாறியது.
அடர்த்தியாக இருந்த முடியும் உதிர்ந்து விழுந்தது. அதேபோல் அண்மையில் இந்த கையை வைத்து தன் தேர்வையும் எழுதியிருக்கிறார் அந்த பெண்.அந்த கையில் தோல்கள் இப்போது மிக மிருதுவாக இருக்கின்றன.அண்மையில் இவருக்கு அறுவைசிகிட்சை செய்த சுப்பிரமணிய ஐயருக்கு, அவரது பிறந்தநாளில் இந்த கையிலேயே பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் எழுதினார் சித்தனா கெளடா. இது தன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் மருத்துவர் சுப்பிரமணியம்
இதுகுறித்து தெரியவந்த பலரும் அந்த பெண்ணை ஆச்சர்யத்தோடு நேரில் போய் பார்த்து வருகின்றனர்.