மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை… பந்து போல் கேட்ச் பிடித்து காப்பாற்றிய வாலிபர்..

தாய் சமைத்துக் கொண்டிருந்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல் வழியாக தவறி விழுந்தது. குழந்தையை கிரிக்கெட் பந்துபோல இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்தார். இதனால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுதொடர்பான வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இஸ்தான்புல் நாட்டில் தான் இந்த ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள பெய்த் மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தை ஒன்று ஜன்னலில் இருந்து தவறுதலாக விழுந்தது. அந்த நேரம் கீழே இருந்த வாலிபர் எதேச்சையாக ஆகாயத்தைப் பார்த்து குழந்தை கீழ்நோக்கி வருவதைக் கண்டார். உடனே குழந்தையை கேட்ச் பிடித்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. குழந்தையை கேட்ச் பிடித்து உயிரைக் காப்பாற்றியது அல்கேரியன் நாட்டைச் சேர்ந்த சாபத் என்ற வாலிபர் ஆவார். அவர் அந்த பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப் ஒன்றில் பணி செய்து வந்தார். அந்த இளைஞனின் தன்னமலற்ற சேவையையும், தன் குழந்தையை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாகவும் 200 டர்கீஸ் லிராஸ் பண முடிப்பை அன்பளிப்பாக கொடுத்துள்ளனர் குழந்தையின் பெற்றோர்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

You may have missed