ஓடும் ரயிலில் இருந்து பக்கத்து ரயிலுக்குத் தாவிய வாலிபர்… சிட்டி ரோபோவையே மிஞ்சிட்டாரு போங்க..

ரயில் பயணத்தை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அந்தவகையில் ரயில் பயணம் நம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு உற்சாகமாக டாட்டா காட்டுவார்கள்.

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அவை அத்தனையும் இப்போதுதான் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன. நீண்டதூர பயணத்தின் துணைவன் என்றே ரயிலைச் சொல்லிவிடலாம். அதனால் தான் அதில் முன்பதிவு செய்து படுக்கை இருக்கையை உறுதிசெய்ய அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயிலும் அடிக்கடி ஓடும். அதிலும் இந்த ரயில்கள் அருகருகே செல்லும். இங்கேயும் அப்படித்தான் இணை பறவைகள் போல் இரு மின்சார ரயில்கள் அருகருகே சென்று கொண்டிருந்தன. அந்த ரயிலில் சென்ற வாலிபர் ஒருவர் ஒரு ரயிலில் இருந்து அடுத்த ரயிலுக்கு தாவிக் குதித்தார். கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வது போல் மிகவும் ஆபத்தான துள்ளல் இது! ஆனால் அதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு அந்த இளைஞர் ரயிலுக்குள் போய்விட்டார்.

இரு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருக்கும் சுழலில் இவர் ஏன் இப்படித் துள்ளிக் குதித்தார். எல்லாம் கெத்து படுத்தும் பாடுதான் என நெட்டிசன்கள் இதன் அபாயத்தை எண்ணி புலம்பி வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

You may have missed