இவரு கண்டிப்பா 90-ஸ் கிட்ஸ் ஆக தான் இருப்பார்… மனைவியை அழகாக தோளில் சுமந்து படியேறி சென்ற சம்பவம்…
திருமணம் ஆயிரம் காலத்து பயிர்…….திருமணத்தின் மூலம் இரு வேறு குடும்பத்தார் இணைந்து கோலாகலமாக நடத்தும் வைபவம். திருமணதில் நம் தமிழரின் பாரம்பரியம், கலாச்சாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை வெளிப்படும். சொந்தங்கள், உறவினர்,ஊரார் முன்னிலையில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு நடைபெறும் திருமணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பது மணமகன் மற்றும் மணமகள் கைகளில் உள்ளது.
திருமணத்தில் இரு பாலரும் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சகிப்பு தன்மையுடனும், அன்புடனும் வாழ்ந்து சவால்களையும்…… இன்னல்களையும்……. ஆக்க பூர்வமாக சிந்தித்து….. சமாளித்து…..வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கையின் தத்துவம்.
அன்பு அனைவரையும் வசப்படுத்தும்……அன்பு கொண்ட நெஞ்சம் பிழைகளை திருத்தும்…..பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வில் வெற்றிக்கு பின்னால் தனது தாயோ அல்லது தாரமோ இருப்பதாக கூறுவார்கள். தாய் என்றாலும் மனைவி என்றாலும் எந்த பொறுப்பு அவர்களிடம் உள்ளதோ அதை அவர்கள் திறம்பட நிர்வகித்து சரியான வழிகாட்டியாகவும், ஊக்கப்படுத்துபவராகவும் அமைந்து விட்டால் அந்த ஆண் வெற்றி பெறுவது நிச்சயம். கணவனோ அல்லது மகனோ அவர்கள் தங்கள் அன்னை மற்றும் மனைவியின் நியாயமான கருத்துக்களுக்கு செவிமடுத்தால் அவர்களின் வாழ்க்கை செம்மையான பாதையில் செல்லும்.
இங்கே ஒரு அன்பான கணவன் தன் மனைவியை கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக தோளில் சுமந்து அசால்ட்டாக படியேறி செல்கிறார். வேண்டுதலோ அல்லது நேர்த்தி கடனோ அவர் தம் மனைவியை தோளில் சுமந்து செல்லும் காட்சியை கண்ட சமூக வலைத்தளத்தினர் நிச்சயம் இவர் 90-ஸ் கிட்ஸாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆருடம் சொல்லி வருகின்றனர். அந்த அன்பான கணவனின் செயலை இங்கே காணலாம்…….