நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்…
தமிழர்கள் பாரம்பரியம்…….. பழக்க வழக்கம்……. பழமை வாய்ந்த கலாச்சாரம் மிக்க பூமியாகும். இங்கு பண்டிகை காலங்களிலும், திருவிழா நாட்களிலும், திருமணவைபவங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகத்தில் பக்தியோடு, இசையும், பாடலும் ஒருங்கே இணைந்தது ஒலிப்பது நம் பாரம்பரிய வழக்கம். திருவிழாக்கள் என்றால் மேளம், நாதஸ்வரம், பறை, பாடல் இசைப்பது, நடனம் ஆடுவது, வில்லுப்பாட்டு, கும்பாட்டம் என தமிழக மக்களின் வாழ்வில் ஒன்றிப்போனது இசை, பாடல் மற்றும் நடனம். நம் தமிழ் சங்க இலக்கியங்களில் இயல், இசை, நாடகம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.
பெருமை மிகு பழமை வாய்ந்த நாகரிக கலாச்சாரத்தோடு வாழந்த மக்கள் இன்றும் நம் தலைமுறையினர் பாரம்பரிய இசையையும், நடனத்தையும் கற்று அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவருகின்றனர். பறை இசைப்பது திருவிழாக்கள் தொடங்கி, பண்டிகை நாட்களில் மட்டும் இல்லாமல் மறைந்த பிறகு இறுதி ஊர்வலத்தின் போதும் பறை இசைத்து வாழந்து மறைந்த அம்மாமனிதரின் பேரன் பேத்திகள், பூட்டன் பூட்டி என அடுத்த மூன்றாம் தலைமுறையினரையும் பார்த்த மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களை பெற்று, நன்றாக வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்ததை எடுத்து கூறும் விதமாக பறையானது இறுதி ஊர்வலத்தின் போது பறையடிக்கப்படுகிறது.
தமிழரின் கலாச்சாரத்தில் ஒன்றிப்போன பறையை பெண்கள் ஒன்றாக கூடி அடித்து தூள் கிளப்பிய சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனந்தமாக பறையமைத்த பெண்களின் ஆற்றலை இங்கே காணலாம்……