க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? இவரும் தற்போது மிக பெரிய நடிகைதான்…

ஏன் பசப்புக்கள்ளி……. பசப்புக்கள்ளி…… என்ற பாடல் இடம் பெற்ற படமான தேவராட்டம் திரைப்படத்தில் நடித்த கதநாயகன் கௌதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி மஞ்சிமா மோகன் இருவரும் நவம்பர் 28-ம் நாள் பெற்றோர்கள் சம்மதத்துடன்…. பெரியோர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

நடிகர் கௌதம் கார்த்திக் பழம் பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனும் ஆவார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் 2013-ல் அடி எடுத்து வைத்தார் கௌதம் கார்த்திக் . மஞ்சிமா மோகன் 2015-ம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.

நடிகை மஞ்சிமா மோகன் குடும்பம் சினிமா பின்னணி கொண்ட குடும்பம் ஆகும். இவரது தந்தை திரைப்பட ஒளிப்பதிவாளர் விபின் மோகன் தயார் நடன கலைஞர் கலமண்டலம் கிரிஜா. இவர் பள்ளி படிப்பை திருவனந்தபுறத்திலும், கல்லூரி படிப்பை சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

இவருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும் கடந்த நவம்பர் 28 அன்று திருமணம் நடந்தேறியது. தற்போது இவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.