காதலுக்கு மரியாதை செலுத்திய உறவினர்கள்… 78 வயதில் மறுமணம் செய்து வைத்த மகன் மற்றும் மருமகன்கள்.. சுவாரஸ்யமான சம்பவம்…

திருமணத்திற்கு வரன் தேடுவது பெரும் சவாலாக இருக்கும். இருவீட்டாருக்கும் பிடித்திருந்தாலும், பொருத்தம் பார்த்து திருமணம் முடிவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இதனால் தான் பெரியவர்கள் வீட்டை கட்டி பார்…… திருமணத்தை நடத்தி பார்……. என்று சொல்லி வைத்தார்கள். இந்த இரண்டும் அதிக பொருட் செலவோடு …..அதிகம் மெனக்கெட வேண்டி வரும்.

கேரளாவில் மகள், மகன் மற்றும் மருமகன்கள் இணைந்து தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 78 வயதான சோமன் நாயர் என்பவர் ஒய்வு பெற்ற விமான படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரது மனைவி இயற்கை எய்தினார்.

சமீபத்தில் சோமன் நாயர் தனது நண்பனுக்கு துணை தேடி வரன் பார்க்க சென்ற இடத்தில் அங்கிருந்த ஒரு பெண்ணிற்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவர் கணவனை இழந்த பெண் பீனா குமாரி. இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவருக்கு திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பொறுப்புகளையும், கடமைகளையும் முடித்து தனிமையில் வசித்து வந்த நிலையில் இருவரின் சந்திப்பின் மூலம் புதியதொரு வாழ்க்கை துணை அமைந்துள்ளது.

இருவரும் மறுமணம் செய்ய தங்கள் குழந்தைகளிடம் தெரிவித்து அவர்கள் முன்னிலையில் அனைவரின் ஒப்புதலோடு மறுமணம் செய்துகொண்டனர். வயதான காலத்தில் தனிமையில் தவிக்கும் உள்ளங்களுக்கு துணை தேவை என்பதை அவர்கள் குழந்தைகள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

You may have missed