மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்..

மணமக்கள் நன்றாக வாழ உறவினர்கள் ஆசீர்வதித்து, பூக்களை மழையாக பொழிந்து, வாழ்த்து மடல் வாசித்து, ஆட்டம்…பாட்டம்….கொண்டாட்டம் என திருமணம் திருவிழா போன்று நடைபெறும். தற்போது உள்ள தலைமுறையினரான மணமக்கள் ஆட்டம் ஆடி…பாட்டுப்பாடி அதிர வைக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

குத்தாட்ட பாடல்களுக்கு குழுவினருடன் குத்தாட்டம் ஆடி திருமணத்திற்கு வந்தவர்களை ஆச்சர்யப்படுத்தும் சம்பவங்கள் இணையத்தில் பல காண கிடைக்கிறது. ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியில் மிதந்தாலும் மணமகள் திருமணம் முடித்து பிறந்தகத்தில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். அவர்களை தேற்றும் மணப்பெண்ணின் உறவினர்களும் கண்ணீர் ததும்ப வழியனுப்பி வைப்பார்கள். நாகரிகத்தில் நாம் மேம்பட்டு இருந்தாலும் பாசமும், அன்பும் என்றும் நம்மை விட்டு நீங்காது. தந்தை தாய் அன்பிற்கும், குழந்தைகள் பெற்றோர்கள் மேல் கொண்ட அன்பிற்கும் ஈடு இணை இல்லை.

புகுந்த வீட்டிற்கு செல்லும் முன்பு பிறந்த வீட்டில் அவருடைய பெற்றோர்க்கு லிட்டில் பிரின்சஸ் ஆக இருந்தாலும் ஒரு சில புத்திமதிகள் சொல்லி வழியனுப்பி வைப்பார்கள். இங்கே ஒரு லிட்டில் பிரின்சஸ் புகுந்த வீட்டிற்கு செல்லும் முன்பு அவரை உறவினர்கள் வழியனுப்பிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..அதனை இங்கே காணலாம்.

You may have missed