அண்ணே அது என் நண்பனே.. கறிக்காக வெட்டப்பட இருந்த வாத்தை வேற லெவலில் காப்பாற்றிய நாய்…

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். தன்னை வளர்க்கும் எஜமானர்கள் மட்டுமல்லாது, சகல ஜீவராசிகளிடமும் மிருகங்கள் பேரன்பு கொண்டவைதான். இதோ அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

எஜமான் ஒருவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் தன் எஜமானரின் மீது அதீத அன்பு கொண்டு இருந்தது. ஒருநாள் அந்த எஜமான் இறைச்சிக்காக வாத்து ஒன்றை உயிரோடு வாங்கிவந்தார். அந்த வாத்தை எஜமான் கழுத்தில் கத்தியை வைத்து அறுக்க முயன்றார். உடனே, அந்த நாய், எஜமானரின் கை மீது தன் ஒரு காலை வைத்து தடுத்தது. தொடர்ந்து அவரது கையில் இருக்கும் கத்தியைத் தன் வாயால் கவ்விக்கொண்டு அந்த இடத்தை விட்டு செல்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள். உருகிவிடுவீர்கள்…

You may have missed