விஜய் டிவி புகழ் ராமர் அவரின் பிரம்மாண்ட புது வீடு இதுத்தான்… வெளியான கிரகப்பிரவேச புகைப்படங்கள்..!

ராமரின் நகைச்சுவை காட்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் அது, இது, எது என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். வடிவேல் பாலாஜி, பழனி பட்டாளம், ஜார்ஜ், நாஞ்சில் விஜயன் மற்றும் ராமர் நடத்தும் நகைச்சுவை காட்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

ராமரின் சிறப்புகளாக என்னமா….. இப்படி பண்றீங்களேம்மா…வசனமும், ஒத்த ரோசா புள்ளைய ரெம்ப அழகா வளத்திருக்கேம்மா…..வசனமும், ஆத்தாடி என்ன உடம்பி என்ற பாடலை பாடி அதற்கு அவர் ஆடிய ஆட்டமும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இவருக்கென்றே ராமர் வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சி இவரை மையப்படுத்தியே விஜய் டிவியில் எடுக்கப்பட்டது. சமீபத்தில் கூட ராஜு வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் ராமரின் நகைசுவை காட்சிகள் சிரிக்க வைத்தது.

ராமர் அவர்கள் மதுரையில் சுக்காம் பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்ற தகவல் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி M.P வெங்கடேசன் அவர்கள் கள ஆய்வின் போது அவரை சந்தித்ததை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதுவரை ராமர் விஜய் டிவி பிரபலம் என்பது தான் மக்களுக்கு தெரியும். இந்நிலையில் அவர் பொறுப்புள்ள அதிகாரியாக பணியாற்றி வருவதை அறிந்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மேலும் ராமரின் வீட்டு கிரக பிரவேசத்தில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

video :

You may have missed