தாய் பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் போலிருக்கே… நாங்களும் உன்ன போல் தான் அழாதேடா செல்லம் கமெண்ட் செய்த 90ஸ் கிட்ஸ்..!

குழந்தைகள் சற்று வளர்ந்ததும் பேசுகிறார்களோ இல்லையோ…..சாப்பிடுகிறார்களோ இல்லையோ……நிச்சயம் அவர்களை பள்ளியில் சேர்த்துவிடுவார்கள் பெற்றோர்கள். உலகத்தை முதன் முதலாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி எதிர்கொள்வது கல்வி கூடத்தில். தந்தை, தாய், தாத்தா, பாட்டி போன்றோருடன் நாட்களை செலவழித்த குழந்தைகள் முன் பின் தெரியாத மற்ற குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கண்ட உடன் அவர்களின் மனதில் கலக்கம் தோன்றும்.

பெற்றோருடன் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் பெற்றோரை பிரிய மனமில்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து மிட்டாய்களை வழங்கி அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒரு சில மணி நேரங்கள் கூட பெற்றோரை நினைத்து அழுது கொண்டிருப்பார்கள். இவர்கள் பள்ளி செல்லும் முன்பு அருகில் இருக்கும் பாலர் பள்ளிகளுக்கும் சென்று பாடம் படித்திருப்பார்கள். பாலர் பள்ளிகள் கிராமங்களில் வீட்டின் அருகே அமைந்திருக்கும் அல்லது நடந்தே சென்று வரும் சூழலில் இருக்கும், அப்போது எதேச்சையாக தெரிந்தவர்களை கண்டால் என்னை காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிடும் குழந்தைகளும் இருப்பார்கள். அவர்கள் அவ்வாறு கதறுவதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கும்.

90-ஸ் கிட்ஸ்கள் பாலர் பள்ளிகளுக்கு மட்டும் அல்ல கல்வி கூடங்களுக்கு சென்று வருவதற்கே பெரும் பாடகவே இருக்கும். தினமும் அவர்கள் பெற்றோரை படாதபாடு படுத்திவிடுவார்கள். மேலும் அவர்கள் அடி வாங்காத நாட்களும் இல்லை எனலாம் காலையில் பள்ளி செல்வதற்கு விரும்பாமல் வயிற்று வலி, தலை வலி, காய்ச்சல், வாந்தி என சாக்கு போக்கு சொல்லி விட்டு பள்ளிக்கு செல்லாமல் இருக்க நிறைய காரணங்கள் தேடி வைத்திருப்பார்கள். இங்கேயும் ஒரு அம்மா பிள்ளையான சிறுவன் ஒருவன் தாயையும் தந்தையையும் பிரிய மனமில்லாமல் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கூப்பிட வாங்க என்று கூறி விட்டு உள்ளே சென்ற சிறுவன் தாயை பார்த்து அழுது கொண்டு முத்தமிட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.அம்மா பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் என 90-ஸ் கிட்ஸ் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். என் பையனும் இப்படி தான் என தாய்மார்களும் தன்னுடைய பிள்ளையை பிரதிபலிப்பதாக கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மனதை நெருடும் அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

You may have missed