புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…!

புஷ்பா படம் இந்தியா முழுவதும் வெளிடப்பட்டு ஹிட்டானது, இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பிரபலம் ஆனது. குறிப்பாக ஏய்….சாமி ……பட பாடல் குழந்தைகள் முதல் கொண்டு பெரியவர்களையும் ஆட்டம் போட வைத்தது.

கடந்த ஆண்டு இறுதியில் புஸ்பா படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் திரையிடப்பட்டது. 2021-ல் வெளிவந்த திரைப்பட வரிசையில் இந்த படம் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

தற்போது ரஷிய மொழயில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரஷ்யா நாட்டிலும் திரையிட தயராகி வருகிறது.இந்நிலையில் சிறப்பு ப்ரீமியர் காட்சிகள் டிசெம்பர்- 1 அன்று மாஸ்க்கோவிலும், மற்றும் 3-தேதி st.பீட்டர்ஸ் பெர்க் வெளியிடப்பட்டுள்ளது. டிசெம்பர் 8-ம் தேதி ரஷியா முழுவதும் 24 பெரிய நகரங்களில் திரையிடப்பட உள்ளது. பான் இந்திய திரைப்பட வரிசையில் புஷ்பாவும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. பான் இந்திய படங்கள் உள் நாட்டில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. தென்னிந்திய படங்களான RRR, பாகுபலியும் ஹிந்தி படமான ‘மை நேம் இஸ் கான்’ படமும் ஹிட் ஆனது, அந்த வரிசையில் புஸ்பா திரைப்படமும் ரஷிய மக்களுக்கு பிடித்தமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் நடிகர் அல்லு அர்ஜுனாவிற்கு திருப்பு முனை ஏற்படுத்தியது புஸ்பா படம் , மேலும் அவரது மார்க்கெட் தரத்தையும் மெருகேற்றியது, இந்த படத்திற்கு பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளன. ரஷியாவில் திரைக்கு வருவதற்கு முன்பாகவே ரஷிய மக்களுக்கு பிடித்த பாடலாக ஏய் சாமி…….பாடல் வைரல் ஆகியுள்ளது. ரஷிய பெண்கள் ரஷிமிகா மந்தனா ஆடிய அந்த நடன அசைவுகளை அப்படியே ஆடி தெறிக்க விட்டுள்ளனர். அந்த காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

You may have missed