தன் திறமையால் மலையாளிகளை அசரவைத்த தமிழ் சிறுவன்… வாழ்த்தி பகிருங்கள்..!

கொடிது..கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை என அவ்வைப்பிராட்டி சொல்லுவார். அதேபோல் இளமையில் வறுமை வந்தால் நாம் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

குழந்தைப் பருவத்தில் கஷ்டத்தின் காரணமாக வேலைக்குச் செல்லும்போது படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். இதனால் எவ்வளவு காலம் ஆனாலும் வாழ்வில் கல்வி எட்டாக்கனியாகி விடும். ஆனால் இந்த கஷ்ட சூழலை சமாளித்து வாழ்வில் ஜெயித்தவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. தன் குழந்தைப்பருவத்திலேயே குடும்பத்தை சுமக்கும் பணி வந்து அதனால் குழந்தைத் தொழிலாளர்கள் ஆனவர்கள் அதிகம். இங்கேயும் அப்படித்தான் ஒரு சிறுவன் கேரளத்தில் 5 நிமிடத்திலேயே அழகான பூக்கூடை செய்து கொடுத்து விற்று வருகிறான். இந்த சிறுவனின் திறமை பலரையும் ஆச்சர்யப்படுத்திவருகிறது. அந்த சிறுவன் தமிழன் என்பது இன்னும் ஒரு சிறப்பாகும்.

குமுளி அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்த ரெசின் தான் அந்த சிறுவன். தன் குடும்ப கஷ்டத்தின் காரணமாக கேரளாவில் பூக்கூடை செய்து தெருத்தெருவாக போய் விற்கிறான் இந்த சிறுவன். அவனது வேலையைப் பார்த்துவிட்டு சின்ன பையனாக இருக்கிறானே என யாரும் அன்பளிப்பாகக் காசு கொடுத்தால் அதைக்கூட வாங்குவதில்லை இந்தப் பொடியன். தன் உழைப்புக்கான பணத்தை மட்டுமே வாங்கிக் கொள்கிறான். இந்தச் சிறுவனின் இந்த அழகான வேலைப்பாடு பலரையும் கவர, மலையாளி ஒருவர் இந்த சிறுவனின் உழைப்பையும், அவனது வேகத்தையும் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அது பத்துலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.

You may have missed