யாருய்யா இந்த சிறுவன்.. கில்லி விஜய்க்கே டப் கொடுப்பார் போலயே.. இவருக்கு எதிர்காலம் ஓகோன்னு இருக்கும்…

இன்றைய சிறுவர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சின்ன பொடியன் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அப்படி அந்த பொடியன் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திறமை என்பது விலை மதிக்க முடியாதது. சிலருக்கு என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திறமை என்பது இருக்காது. ஆனால் சிலரோ, வறுமையில் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களது திறமையோ வேற லெவலில் இருக்கும். திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும்.

அதிலும் சிலரை பார்த்த முதல் தோற்றத்திலேயே மிகவும் குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம். வாட்ட சாட்டமான உடல், உடுத்தியிருக்கும் உடை ஆகியவற்றை வைத்தே நாம் அவர்களை எடைபோடுகிறோம். சிலரை நாம் எப்போதுமே ‘அண்டர் எஸ்டிமேட்’ செய்து விடுகிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நம் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு என்றால் அது கபடி போட்டிதான். கபடி விளையாடுவதே செம கெத்தாக இருக்கும். கபடி, கபடி என பாடி வருவதே பார்க்கவே ரம்மியமாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு கபடி மேட்ச் நடந்தது. அதில் 5 வயது மட்டுமே ஆன பொடியன் ஒருவனும், சிறுவர்களோடு களத்தில் நிற்கிறான். அவன் கபடி ஆடும் ஸ்டைலே செம கெத்தாக இருக்கிறது. அதிலும் அந்த பொடியன் அவனே முதல் ஆளாக கபடி பாடுபவரின் காலைப் பிடிக்கிறார். கில்லி விஜயையே ஓவர்டேக் செய்வது போல் செம கெத்தாக ஆடுகிறார் அந்த பொடியன். இதோ நீங்களே பாருங்களேன். வீடியோ இதோ

You may have missed