திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..!
தலை குனிந்து…நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இன்றி ஓரக்கண்ணால் பார்ப்பார்கள் அந்தக்காலத்து திருமண ஜோடிகள் …..காலங்கள் செல்ல செல்ல எல்லா விதமான பழக்க வழக்கங்கள் , சம்பிரதாயங்கள் மாறி கொண்டே செல்கின்றன. 60-வது 70-வது களில் திருமணம் செய்தவர்கள் ஒருவரை பற்றி இன்னொருவருக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. திருமண நாள் அன்று தான் மணமக்கள் இருவரும் பார்த்து கொள்வார்கள். ஓ….இவர் தான் மாப்பிள்ளையா….. ஓ…..இவர் தான் மணப்பெண்ணா என பார்த்து ஆச்சரியமோ….அல்லது மகிழ்ச்சியோ அடைவார்கள். 80-களில் மணப்பெண்ணை மணமகன் வீட்டிற்கு சென்றோ அல்லது கோவில்களிலோ பார்த்து நிச்சயம் செய்வார்கள்.
தற்போது உள்ள காலத்தில் கட்டத்தில் மேட்ரிமோனி, எலைட் போன்ற சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் வரன் தேடுகின்றனர். இதில் வரனை பற்றிய முழு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவரவருக்கு பொருத்தும் மணமக்களை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இப்போது உள்ள தலைமுறையினர் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சில நேரங்களில் செய்திகளின் மூலம் அறிந்திருப்போம். ஆண், பெண் வேறுபாடுயின்றி கல்வியின் மூலம் IPS, IAS முதல் விண்வெளி பயணம் வரை தங்களுக்குள்ள திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்களில் நிர்வாக பொறுப்புகளிலும் பங்கு பெற்று தங்கள் திறமையின் மூலம் புகழ் அடைகிறார்கள். திருமணத்திலும் தனக்கு வேண்டியதை மாப்பிள்ளை வைத்தே வேலை வாங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. திருமணத்தில் இங்கு ஒரு மணமகள் திருமண நாள் அன்றே மணமகனை அங்கே பார்…… இதை செய்….அதை செய்….. என்று அவரை அலைகளித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரல் அகி வருகிறது.2k -கிட்ஸ் காலத்தில் இப்படி ஒரு அப்பாவி மணமகனா என நெட்டிசென்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.