எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…!
அண்மைக் காலங்களில் மரங்கள் வெட்டுவதால் அதில் உள்ள பறவைகள் தங்களுடைய வீடுகளை இழந்து தவித்த காட்சிகளை பார்த்திருப்போம். ஆம். உண்மையில் பறவைகளுக்கு தாங்கள் இனி ஒரு புதிய வீட்டை தேடி செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கூட ஏற்பட்டிருக்கலாம். மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப தனக்கு தோணுகின்றவற்றை செய்கிறான். அதனால் பிற உயிர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்கிறதா என்று கூட யோசிப்பதில்லை.
சில நேரங்களில் மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன் அளிக்க கூடியதாயும் இருக்கிறது.
புல்டோசர் ஒன்று ரோட்டில் ஓரத்தில் நிற்கும் மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டும் விதமாக புதியதாக கண்டு பிடிபட்டு இருக்கிறது. இதனால் மரத்தில் வாழும் பறவைகளுக்கு எந்த வித இடையூறுகளும் இருக்காது என்று தோன்றுகிறது.
அந்தவகையில் ஒரு வீடியோ இணையத்தில் அதிக கமெண்ட்களை பெற்று வேகமாக பரவி வருகிறது.