இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…!

கல்லூரி விழா என்றால் மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். தங்களுக்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பாக கருதி அவரவருக்கு இருக்கும் திறமைகளை மேடையில் அரங்கேற்றி அரங்கையே தெறிக்க விடுவார்கள். கைதட்டலும் விசிலும் காதை கிழிக்க உற்சாக மிகுதியால் கொண்டாடி தீர்ப்பார்கள். கல்லூரி காலங்கள் வாழ்வில் ஒரு முறையே வரும் கனாக்காலம். வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் காலம். கல்லூரி முடிந்த பிறகு பொறுப்புள்ள இந்திய பிரஜையாகவும், வீட்டிற்கு பொறுப்புள்ள மகனாகவும்,மகளாகவும் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புகளை கையில் ஏந்தும் காலகட்டத்தில் இருப்பார்கள். அதனால் கல்லூரியில் நன்றாக படித்து அறிவை வளர்த்து காலத்திற்கு தகுந்தாற்போல் இன்னும் பிற துறைகளில் அறிவை பெற்று கொள்ள நல்ல வாய்ப்பாக திகழும் கல்லூரி பருவம்.

கல்லூரி காலம் பொன் போன்றது என்று எண்ணி படித்து வரும் மாணவர்கள் தங்கள் இன்னபிற திறமைகளான பேசாற்றால், கவிதை கூறுதல், நாடகம் அரேங்கேற்றுதல், இனிமையாக பாடுதல், திறமையாக நடனம் ஆடுதல், மிமிக்கிரி செய்தல் போன்ற பல திறமைகளை வெளி கொண்டு வரும் நாள் இது போன்ற கல்லூரி விழாக்கள். இதில் அவரவரின் தனி திறமைகள் வெளிப்படும். இவருக்குள் இப்படி ஒரு திறமையா என உடன் பயிலும் மாணவர்களும் ஆச்சர்யபட நிகழ்வுகளும் நடந்தேறும் நாள்.

இங்கு ஒரு மாணவர்கள் குழுவானது சினிமா பாடலுக்கு பிரபு தேவா போன்றும், நடிகர் விஜய் போன்றும் ஆடி மரண குத்து குத்துவார்கள் என்று எதிர்பார்த்த மாணவர்களை அவர்கள் தங்கள் நடனத்திறமையால் வேடிக்கை பார்த்த மாணவ செல்வங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…..அந்த காணொலியை இங்கே காணலாம்….

You may have missed