வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்……
பறவைகளை குழந்தைகள் போல் உணவளித்து பாதுகாக்கும் பறவை மனிதர் சேகர், சென்னயில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இவர் தினமும் காலை மாலை என்று அங்கு வரும் பறவைகளுக்கு தண்ணீரில் ஊற வைத்த அரிசியை உணவாக தருகிறார். ஆயிரக்கணக்கில் இவரது வீட்டிற்கு பறவைகள் அனுதினமும் விருந்துண்டு செல்கிறது. இதற்காக அவர் காலை 4 மணிக்கே எழுந்திருந்து மாடியை சுத்தம் செய்து பறவைகளுக்கு உணவளிக்கும் பலகைகளை வரிசையாக அடுக்கி வைத்து அரிசியை அந்த பலகைகளில் பரிமாறுகிறார். இவ்வாறு அனுதினமும் அவர் செய்வதால் பறவைகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதில் கிளிகள் மற்றும் புறாக்களின் எண்ணிக்கை அதிகம். கூகிள் மேப் கூட இவரது வீட்டை புறாக்களின் மனிதர் என்ற அடையாளத்துடன் குறிப்பிடுகிறது.
பறவை மனிதரான சேகர் அவர்கள் 2004-ல் ஏற்பட்ட இயற்கை பேரிடரான சுனாமியின் போது சில கிளிகள் அவரது வீட்டின் அருகில் உணவுண்ண வந்துள்ளது, அதற்கு உணவளித்து வந்துள்ளார். தினமும் அந்த பறவைகளுக்கு உணவளித்து வந்த நிலையில் நாளடைவில் அதிகமாக பறவைகள் வந்து உணவுண்ண ஆரம்பித்திருக்கின்றன. ஆயிரக்கணக்கில் இவரது வீட்டிற்கு உணவுண்ண வந்த பறவைகளுக்கு தினமும் இரு வேளை காலை மாலை என உணவளித்து வந்துள்ளார். ஒரு நாளைக்கு மட்டும் 65கிலோவுக்கு அதிகமாக அரிசியை உணவாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 18வருடங்களாக பறவைகளுக்கு உணவளித்து வரும் பறவை மனிதர் எலெட்ரிசியன் மற்றும் புகைப்பட கருவி பழுது பார்க்கும் தொழிலையும் செய்து வருகிறார்.40/- வருமானத்தை பறவைகளுக்கு செலவிடுகிறார், மேலும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இவரது இல்லத்திற்கும் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். வெளிநாட்டினர் பறவைகளுக்கு உணவு வழங்க உதவி தொகை வழங்கிய போது வாங்க மறுத்துள்ளார். தனது குழந்தைகள் போன்றது பறவைகள் என்றும் தனது குழந்தைகளுக்கு உணவளிப்பது தனது கடமை என்றும் பதிலளித்துள்ளார். சென்னையின் பறவை மனிதர் என்ற அடையாளத்தை சென்னைக்கு வாங்கி தந்து பெருமை சேர்த்தவர் தற்போது இன்னலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுவரை அவர் வசித்து வந்த வாடகை வீடு உரிமையாளர்களுக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் தற்போது வீடு மாற வேண்டிய சூழலில் உள்ளார். இதனால் இதுவரை உணவளித்து வந்த பறவைகளுக்கு இனி யார் உணவளித்து காப்பார்கள் என்ற பெருங்கவலையில் சிக்கியுள்ளார். இதனை அறிந்த சமூக வலைதளவாசிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கோரிக்கை விடுத்து கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை கீழே காணலாம்..