காரின் பின்பக்க கண்ணாடியில் இந்த மாத்தி கோடு இருப்பது இதனால்தான்.. அதில் மறந்தும் கைவைக்காதீங்க..!
கார் வாங்கவேண்டும் என்பது நம் அனைவரின் கனவாகவும் இன்று இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களும் இப்போதெல்லாம் கஷ்டப்பட்டு இ.எம்.ஐ முறையிலேனும் கார் வாங்கிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு கார்களுக்கான தேவை இன்று கூடி இருக்கிறது. கார் குறித்து எப்போதும் தெரிந்துகொண்டே இருக்கும் ஆர்வமும் நம்மில் பலருக்கு உண்டு.
அந்தவகையில் காரின் பின்பக்க கண்ணாடியில் மெல்லிய கோடுகள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அவை வெறும் கோடு கிடையாது. அதன் பெயர் windshield glass என்பதாகும். அது ஏன் இருக்கு தெரியுமா? குளிர்காலத்தின் போதோ, மழையின் போதோ கண்ணாடி மீது நீர் படியும்.
காருக்குள் இருக்கும் ஈரப்பதம் ஆவியாகியும் அவை நீர்த்திவலைகளாக கண்ணாடிமீது படியும். இதில் முன்பக்க கண்ணாடி என்றா வைப்பர் போட்டு துடைக்கலாம். பின்பக்க கண்ணாடியில் எல்லா காரிலும் வைப்பர் இருக்காது.
சில ஆடம்பரக் கார்களில் வேண்டுமானால் இருக்கலாம். அதனால் தான் பின்பக்க கண்ணாடியில் சின்னகோடுகளைப் போல இருக்கும் மெல்லிய மின்கம்பிகளை பதித்துள்ளனர். இவை நீர் திவலை அல்லது பனிப்படலத்தை மின்சக்தி மூலம் வெப்பத்தை ஏற்படுத்தி நீக்கும். அடேங்கப்பா சின்ன கோட்டுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய காரணமான்னு தானே கேட்குறீங்க?