பதிலுக்கு பதில் அம்மா,அம்மா என சொன்ன குழந்தை… கடைசியில் அம்மாவுக்கே வைத்த ட்விஸ்ட்..

அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே அம்மா மீது எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு. மனிதர்கள் என்று மட்டும் அல்ல..விலங்கினங்களுக்குக் கூட அம்மா என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் இந்த தரவுகளையே ஒரு குழந்தை மாற்றியமைத்திருக்கிறது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு அம்மா, தன் குழந்தையிடம் உரையாடுகிறார். அப்போது குழந்தையிடம் நடக்கும் உரையாடல்தான் சுவாரஸ்யமாக பகிரப்பட்டுவருகிறது. அதில் தாய் உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார்? எனக் கேட்க குழந்தை உடனே ‘அம்மா’ எனப் பதில் சொன்னது. தொடர்ந்து உனக்கு துணி யார் போட்டுவிடுகிறார்கள் எனக் கேட்க அதற்கும் ‘அம்மா’ என படக்கென பதில் சொல்கிறது குழந்தை.

இப்படி கேட்கும் கேள்விக்கு எல்லாம் குழந்தை ‘அம்மா’..’அம்மா’ என பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது குழந்தை. கடைசியாக உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் எனக்கேட்க, அதற்கு அந்தக்குழந்தை படக்கென ‘அப்பா’ எனச்சொல்லிவிட்டு ஒரு க்யூட் சிரிப்பு சிரிக்கிறது. இது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

You may have missed