ஊசிக்கு பயந்து குழந்தை போல் க்யூடாக இந்த நாய் செஞ்ச செயலை பாருங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல பிடிக்காத இடம் என்றால் நிச்சயம் மருத்துவமனையாக தான் இருக்கும். மருந்து, ஊசி என்றால் குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். உடல் நலம் சரியில்லாத நாட்களில் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து பராமரிப்பது கடினமாக இருக்கும். அவர்களை மருந்து உட்கொள்ள வைக்க பெற்றோர்கள் வித விதமான யுக்திகளை கையாள்வார்கள். கைகளில் இனிப்பு பொருட்களை வைத்து கொண்டு, ஒரு பக்கம் அவர்கள் கவனத்தை வேறுபக்கம் திரும்ப வைத்து மருந்தினையோ அல்லது ஊசி போன்ற தடுப்பு மருந்துகளையோ செலுத்துவார்கள்.

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் வீடியோக்கள், ஊசி செலுத்தும் காட்சிகள் பல வைரல் ஆகி வருகிறது. பிறந்து ஆறு மாதமான குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தும் போது வலி தெரியாமல் இருக்க வேண்டி தந்தை குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாக மாறியது. மேலும் ஒரு வயது மேற்பட்ட குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்கு ஜூஸ் பாக்கேட்டில் வைத்து ஸ்ட்ரா மூலம் மருந்து கொடுத்த கட்சிகளும் வைரலாக மாறி யது.

குழந்தைகள் மட்டும் அல்ல வாயில்லா ஜீவா ராசிகளுக்கும் மருந்து , ஊசி என்றாலும் பயம் என சில நிகழ்வுகள் மூலம் தெரியவருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டால் நோய் தொற்று ஏற்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும். அவ்வாறு நோய் தடுப்பூசி செலுத்த வேண்டி வாயில்லா ஜீவனான நாய் ஒன்றிற்கு மருத்துவர் ஊசியை கையில் எடுக்க முற்படும் போது நாயானது மருத்துவரின் கைகளை இருக்க பற்றி கொண்டு வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறது…மேலும் அவரின் முகத்தருகினில் முகத்தை வைத்து கொஞ்சுகிறது, காதினுள் ரகசியம் உரைப்பது போல் வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கால்களால் அவரின் கைகளை இருக்க பற்றுகிறது. இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் வாயில்லா ஜீவனுக்கும் ஊசி என்றால் பயம் தான் என வேடிக்கையாக கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed