பல கோடியில் இருந்து பூஜ்யத்துக்கு வந்த தந்தை… மீண்டும் தூக்கி நிறுத்திய மகன்… 25 வயதில் கோடீஸ்வரனான இளைஞ்சரின் கதை..!

ஒரு 25 வயது வாலிபர் சொந்தத் தொழில் தொடங்கி, இந்த வயதுக்குள்ளேயே கோடீஸ்வரராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து, அனைத்தையும் இழந்து மீண்டும் அந்த இடத்தை பிடித்திருக்கும் அந்த இளைஞனின் தன்னம்பிக்கை கதை இதோ…

முகமது சஹித்(25)க்கு ஆப்கானிஸ்தான் பூர்வீகம். கடந்த 2006ல் இவர் குடும்பத்தோடு ஐக்கிய அமீரகத்தில் குடிபெயர்த்தார். கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சஹித்துக்கு அவரது அப்பா, பள்ளிப்படிப்பை முடித்தபோதே ஆடி கார் வாங்கிக் கொடுத்திருந்தார். சஹித்தின் தந்தை ஹசிம், கட்டிடம் மற்றும் எண்ணெய் தொழிலை செய்துவந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் தொழில்நஷ்டம் ஏற்பட்டு குடும்பமே நில குலைந்தது

இதனைத் தொடர்ந்து சஹித்தின் குடும்பம் மொத்தமாக அய்ர்லாந்துக்கு இடம்பெயர்ந்தது. அங்கு போன சஹீத் அயர்லாந்து பல்கலையில் சர்வதேச தொழில்சார்ந்து பட்டப்படிப்பு படித்தார். 2017ல் மீண்டும் குடும்பத்தோடு ஐய்க்கிய அமீரகம் போனார். அப்போதுதான் சுய தொழில் செய்ய முடிவு செய்தார். துபாய் வரும் சுற்றுலா பயணிகளை கவரும்வகையில்அங்கு சொகுசு கார்களை வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பித்தார்.

மைரைடு ஏ இ என்னும் இணையதள பக்கத்தை துவங்கினார். இதில் குறைந்த நேரத்தில் வாடகைக்கார்களை வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் கொடுக்கச் செய்தார். இதில் நல்ல லாபம் கிடைத்த நிலையில், ட்ரிப்சி ஏஇ என்ற டிராவல்ச் தொடர்பான இணைய சேவையை தொடங்கி அதன் மூலம் விமான டிக்கெட் எடுத்துக்கொடுப்பது முதல், ஓட்டல் லாட்ஜ்கள் எடுத்துக்கொடுப்பது வரை கையாண்டார்.

சஹித் இப்போது மூன்று நிறுவனங்களின் சி.இ.ஓவாக இருக்கிறார். இவர் இப்போது இதுவரை சம்பாதித்திருப்பது இந்திய மதிப்பில் கூறுவதென்றால் 23 கோடியே 43 லட்சம்! இது லாபம் மட்டுமே…

தந்தையின் சாம்ராஜ்யம் சரிந்தாலும்…மீண்டும் தன் சுயதொழிலால் விட்ட இடத்தைப்பிடித்து குடும்பத்தையே மகிழ்ச்சிக்க்கடலில் ஆழ்த்தியிருக்கிறார் இந்த 25வயது இளைஞர்! .

You may have missed