இரவில் வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்.. எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? டிவி பார்த்து கொண்டே தூங்குவதும் ஆபத்தே…!

நம்மில் சிலருக்கு ஒரு குணம் உண்டு. வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டு இருக்கபோதே தூங்குவது…சிலருக்கு இரவில் டிவி பார்த்தால்தான் தூக்கமே வரும்…ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என அவர்களுக்கு தெரிவது இல்லை.

தூக்கம் தான் மனித உடலின் அடிப்படை. நாம் எவ்வளவு நேரம் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை தூங்குகிரோம் என்பதைப் பொருத்தே நம் ஆரோக்கியம் இருக்கும். இப்படி விலை உயர்ந்த தூக்கத்தை நாம் விளக்கு வெளிச்சத்தில் தொலைப்பதோடு நோய்கள் கூடாரமாகவும் மாறி விடுகிறோம்.

வெளிச்சத்தில் தூங்குவதில் அப்படி என்ன பிரச்னை என்று யோசனை செய்கிறீர்கள் தானே? தொடர்ந்து வெளிச்சத்தில் தூங்குபவர் களுக்கு உடல் எடை அதிகரிக்குமாம். கூடவே அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சொல்கிறது அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று!

இந்த டிவி அல்லது விளக்கு வெளிச்சத்தில் வரும் செயற்கை ஒளி, மெலடோனின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் நாள் சுழற்சி யிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கும் பல பிரச்னைகள் இதனால் உருவாகிறது.

இனிமேல் இரவு வெளிச்சத்தில் தூங்கவே செய்யாதீர்கள். தேவையில்லாத நோய்கள் உங்களை நெருங்க விடாதீர்கள்…

You may have missed