யார் எடத்துல வந்து யாரு Scene-அ போடுறது. செஞ்சுருவேன்… போட்டோஷூட் வந்த மணமக்களுக்கு தும்பிக்கையான் செஞ்ச தரமான சம்பவம்..!
புதுமையான செயல்கள் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அதே நேரம் நமக்கு பாடத்தையும் கற்று தரும். 2k-கிட்ஸ்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரும் பயணித்திறதா இடங்களுக்கு சென்றும், பாறையின் அல்லது நீர்வீழ்ச்சிகளின் அருகில் நின்று கொண்டு செல்பி எடுப்பதும், பல அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு செல்பி மோகத்தால் பின் விளைவுகளை அறியாது விபரீதத்தை சந்திக்கின்றனர். பெரியவர்கள் என்னதான் அறிவுரைவுரைகள் கூறினாலும் , பல விழிப்புணர்வு செய்திகள் அன்றாடம் கேள்வி பட்டாலும் அதையெல்லாம் புறக்கணித்து விட்டு செல்பி மோகத்தாலும், பிரபலம் அடைவதற்காகவும், லைக்குகள் வேண்டும் என்கிற முட்டாள் தனமாக விஷயங்களுக்காகவும் உயிரை பணயம் வைக்கின்றனர்.
வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பதை நம் முன்னோர்கள் அறிவித்தனர், ஆனால் இன்றோ வருங்கால இளைஞர்கள் கையில் செல்போனும், செல்பியும் என்று சுற்றி திரிகின்றனர். இவர்கள் தான் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள் என்றால், திருமண தம்பதிகள் வெட்டிங்க் ஷூட் என்கிற பெயரில் அவர்களும் ப்ரீ வெடிங்க் ஷூட், போஸ்ட் வெடிங்க் ஷூட் என வித விதமான இடங்களுக்கு சென்று தங்கள் காட்சியை பதிவு செய்கின்றனர். காலங்கள் மாறினாலும் காலத்தின் கைகளில் தான் நாம் பிரயாணிக்கிறோம் என்பதை அறிய தவறி விடுகிறோம். எந்த இடங்களுக்கு சென்றாலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த காட்சிகள் நமக்கு அறிவுறுத்துகிறது.
யானைகள் அமைதியான குணம் கொண்ட உயிரினம். கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக யானைகள் கோவில்களில் பக்தர்களால் பூஜிக்கப்படுகின்றனர். பாகன்கள் அவ்வறின் குணம் அறிந்து அவற்றுடன் நட்பாகவும், அன்பாகவும் பழகுவார்கள். முன் பின் தெரியாதவர்களுடனும் அன்புடன் பழகும். அதே நேரம் பாகன் அருகில் இல்லை என்றால் சில நபர்கள் பழகுவதை தொந்தரவாக எடுத்து கொள்ளும். இதனால் பாகன் அருகில் இல்லாத சமயம் யானையின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். இங்கு ஒரு மணமக்கள் வெடிங்க் ஷூட்டிங்காக வித விதமாக படம் எடுத்து கொண்டிருந்தனர். அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த யானை என்ன நினைத்ததோ….. நிம்மதியா…. என்ன சாப்பிட கூட விடாம…. என் கண் முன்னாடியே உங்களுக்கு என்ன ரொமென்ஸ் என்று கோபம் கொண்டு தென்னை மட்டையை மணமக்களை நோக்கி வீசியது. மணமக்கள் இதை அறியாது நடந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் மட்டை மணமகனின் தோள்களை உரசியபடி சென்றது, ஒரு நிமிடம் பக் என்று அதிர்ச்ச்சியளித்தாலும், இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்று சமூக வலைத்தளவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.