ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….!

வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளில் கிளி முக்கியத்துவம் பெறுகிறது. கிளிகள் அதன் நிறத்துக்காகவும், அலகுகள் வளைந்து சிவந்த நிறத்தில் இருப்பதாலும், அதனுடைய கீச்…கீச்…ஓசை மனிதர்களுக்கு பிடித்திருப்பதாலும் கிளிககளை செல்ல பிராணியாக வீடுகளில் வளர்க்கின்றனர். பெரும்பாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பறவையினங்களில் கிளிகள் அதிகமாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 25 மில்லியனிக்கும் அதிகமாக கிளிகள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சிறு பறவையாக அழகாகவும், கற்று கொடுக்கும் வார்த்தைகளை புரிந்து கொண்டு பேசுவதாலும் கிளிகள் மக்கள் மனதினில் இடம் பிடித்துள்ளது.

கிளிகள் பொதுவாக பழங்கள், தேன், விதைகள், பூக்களின் மகரந்தம் போன்றவற்றை உண்ணும். கிளியிணைகளில் 398 வகைகள் காணப்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு கிளிகள் அழிவு பாதையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கிளிகள் அநேகமாக மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்விடத்தை அமைத்துள்ளன. இவை அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் மனிதர்களுடன் நெருங்கி பழகும் இயல்புடையவை. மனிதர்கள் கற்று கொடுக்கும் வார்த்தைகளை பேசி மனிதர்களுடன் உரையாடும். இங்கேயும் ஒரு கிளி எஜமானர் கற்று தந்த வார்த்தைகளை தனது குஞ்சுகளுடன் பேசி மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கிளியின் குஞ்சுகள் தனது தாய் பறவை என்ன பேசுகிறார்…. என உன்னிப்பாக கவனிக்கிறது…அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

You may have missed