உங்க வாழ்க்கையில் இத நீங்க பார்த்திருக்கீங்களா… மகுடி இசைக்கு மெய்மறந்து எப்படி எழுந்து ஆடுது பாருங்க இந்த பாம்புகள்…!

இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்? பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்த பாம்பு கூட மகுடி இசைக்கு மயங்குவதை நாம் பார்த்திருப்போம். அதை அப்படியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒருவர் அசால்டாக டீல் செய்யும் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?

மகுடி இசைக்கலைஞரான அவர் பாம்புகளை வைத்து சாலையில் வித்தை காட்டி பிழைத்து வருகிறார். அவர் தன் மகுடியை இசைத்து தன் பெட்டியில் இருக்கும் பாம்புகளையும் திறந்து விடுகிறார். ஒரே நேரத்தில் மூன்று பாம்புகளை திறந்துவிட்டு அவர் மகுடி வாசிக்க பாம்புகளோ அந்த இசையில் மெய்மறந்து போய் சொக்கிப் போய் நிற்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். பாம்புகள் என்ன அழகாக இசைக்கு சொக்கிப் போயிருக்கிறது என….வீடியோ இதோ….

You may have missed