மனிதர்களை போலவே தன் குழந்தையை தூக்கி கொஞ்சிய குரங்கு… எவ்வளவு ஆனந்தம் பாருங்க இந்த குரங்குக்கு..!

அனைத்து உயிரினங்களும் ஜனனம் எடுத்த பிறகு தங்கள் வாழ்கை பயணத்தை தொடங்க ஆரம்பிக்கும். குட்டியாக இருக்கும் போது அதனுடைய தாய் குட்டியை காப்பதற்கு கண்ணும் கருத்துமாக செயல்படும். மனிதர்கள் தங்களுடைய குழந்தைகளை முத்தே, வைரமே, கொழுந்தே என்று கொஞ்சி மகிழ்வார்கள். குழந்தையும் தனது அன்பினை புன்னகை மூலம் தெரிவிக்கும். யாரேனும் அறிமுகம் இல்லாதவர் கொஞ்சிவிட்டால் போதும், அழுது ஊரையே கூட்டிவிடும்.

குழந்தைகள் நெருக்கமானவர்களுடன் பாதுகாப்பாகவும், எந்த பயமின்றியும் விளையாடுவார்கள். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி பிடித்தும், விளையாட்டு காட்டுவதற்காக கைகளில் குழந்தையை இறுக பற்றி கொண்டு தன்னை தானே சுற்றியும் விளையாடுவார்கள். அது போன்று நீங்கள் மட்டும் தான் விளையாடுவீர்களா நாங்களும் எங்கள் குட்டிளுடன் விளையாடுவோம்ல…. என விலங்குகளும் நிரூபித்துள்ளன. வேறு யாரும் அல்ல நம்ம குரங்கு இனம் தான் .

குரங்கு குட்டியை கையில் வைத்து கொண்டு சுற்றி சுற்றி கொஞ்சுதலுடன் விளையாடுகிறது. சுற்றி சுற்றி விளையாடும் குரங்கு ஒரு கட்டத்தில் தலைச்சுற்றி தடுமாறும் போதும் கையில் வைத்திருக்கும் குட்டியை கீழே விடாமல் தன்னுடன் அணைத்துக்கொள்கிறது . அருகில் இருக்கும் மற்ற இரண்டு குரங்குகளும் இன்னைக்கு இதுக்கு என்னவாயிற்று என்பது போல் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதை பார்பதற்கு வேடிக்கையாகவும், குரங்குகளும் குட்டிகளுடன் இப்படி விளையாடுமோ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

You may have missed