சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா… சிஎஸ்கே வெற்றியை தன் மகனுடன் ராபின் உத்தப்பா எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க..

2023 கான கடைசி ஐபிஎல் போட்டியில் விறுவிறுப்புக்கும் ,அதிரடிக்கும் பஞ்சமே இல்லை என சொல்லலாம். நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் சென்னை அணி பேட்டிங் செய்ய ஆடுகளம் இறங்கியது, முதல் ஓவரிலேயே மழை வரவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின் டி எல் எஸ் முறையில் சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி வீரர்கள் அனைவரும் போராடி அணியை வெற்றி பெற வைத்தனர். அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு பால்களின் 6 மற்றும் 4 என அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார் ரவீந்திர ஜடேஜா. கடைசி வரை போன இந்த ஆட்டம் கடைசி பந்திலே தான் நிர்ணயிக்கப்பட்டது.கடைசி பால் வரை தித், திக்கென இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆட்டத்தை ராபின் உத்தப்பா வர்ணனையாளராக உட்கார்ந்து டிவிக்கு கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார்.இவர் முன்னாள் CSK பிளேயரும் ஆவார். போட்டியின் கடைசி வின்னிங் சாட் அடித்ததும் ராபின் உத்தப்பா எழுந்து நின்று தன் மகனுடன் வெற்றியை கொண்டாடினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, வீடியோ இணைப்பு கீழே…

You may have missed