ஆத்தி இவரு முரட்டு ரொனால்டோ ஃபேன் தான்யா… கோப்பையை கையில் வைத்து ரொனால்டோவை போல செலிபிரேட் செய்த பதிரனா… வைரலாகும் காணொளி..

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் இன் கடைசி இறுதிப் போட்டி கோலாகலமாக அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் சேர்த்தார்.

பின்பு விளையாடிய சென்னை அணி டி எல் எஸ் முறையில் குஜராத் டைட்டன் ஸ் அணியை வெற்றி கொண்டது. கடைசி இரு பந்துகளில் 6, 4 என அதிரடியாக ஆடி ஜடேஜா சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

சென்னை அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் பத்திராணா.இவரின் பதிவீச்சு மலிங்கா போன்றே இருக்கும் ,இவர் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் ரொனால்டோவின் கோல் செலிப்ரேஷனை இமிட்டேட் செய்வார்(கண்களை மூடி). அந்த வகையில் சிஎஸ்கே வின் வெற்றி கோப்பையை கையில் வைத்து ரொனால்டோ செலிபரேட் செய்வது போல் தனது செலிப்ரேஷனை செய்துள்ளார். தற்போது அந்த காணொளியானது ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது வைரல் ஆகி வருகிறது, வீடியோ இணைப்பு கீழே…

You may have missed