நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..!

இந்த பூனையும் பால் குடிக்குமா….. என்பது பழமொழி, பூனையும் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் என்பது புதுமொழி. அனைவரது வீடுகளிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பார்கள், அப்படி வளர்க்காதவர்கள் கூட வீட்டில் பூச்செடிகள், மரங்கள் வளர்ப்பார்கள். வீடுகளில் மனித உறவுகளையும் தாண்டி நம்முடன் ஒரு இயற்கை சார்ந்த உயிர் நம்முடன் இருந்தால் மனதிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். உறவுகளை தவிர்த்து மற்ற மனிதர்களிடம் பழகும் போது நாம் சற்று எச்சரிக்கை உணர்வுடன் பழகுவோம். ஆனால் நம் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளிடமும், தாவர செடி, கொடிகளிடம் ஏதும் பேசாமல் அமைதியாக பார்த்தாலே மனதிற்கு சந்தோசம் கிடைக்கும். இது நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். இதனால் தான் வீட்டில் விலங்குகளும், செடி கொடிகளும் வளர்க்கப்படுகின்றன.

உலகில் செல்ல பிராணியாக வளர்க்கப்படும் விலங்குகளில் நாய்க்கு அடுத்தபடியாக பூனை உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 95.6 மில்லியன் வீடுகளில் பூனைகள் செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றன.

வீட்டில் பூனை வளர்த்தால் எலி தொல்லை இருக்காது. பூனையும் எலியையும் எதிர்… எதிர்….துருவங்கள். டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் இதற்கு மிக சிறந்த உதாரணம். பூனைகள் சுத்தமாக இருக்கவே விருப்புகின்றன. தனது நாக்கால் உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்கிறது. பகலில் தூக்கத்தில் செலவிடுகிறது, இரவில் மற்றும் காலை வேலையில் சுறு சுறுப்புடன் செயல்படும்.

இங்கே ஒரு டாம் குழந்தையை பார்த்து உன்ன தூங்க வைக்க நான் என்னவெல்லாம் செய்யவேண்டி உள்ளது என அங்கலாய்த்துக்கொண்டு சிறுவனுடைய தொட்டிலை ஆட்டி தூங்க வைக்க முயற்சி செய்கிறது. அந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed