டப்பா, பிளேட் பயன்படுத்தி டப்பாங் குத்து இசையை இசைத்து கலக்கிய பொடியர்கள்..!
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். சில சாமானிய மிடில்கிளாஸ் சிறுவர்களின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி அந்த சிறுவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? முறைப்படி இசைப்பயிற்சி எதுவும் கற்றுக்கொள்ளாத அந்த சிறுவர்கள், இயல்பாகவே வீட்டில் டிவியில் பாடல்கள் ஓடுவதைப் பார்த்தே இசைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொடியர்கள் சாதாரணமாக தெருவில் நின்றுகொண்டு வீட்டில் கிடந்த காலி எண்ணெய் டப்பா உள்ளிட்ட கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இசைக்கிறார்கள்.
திறமைக்கு நம் பொருளாதார சூழல் தடையே இல்லை என விளக்கும் வகையில் இந்த பொடியர்களின் திறமை உள்ளது.குறித்த இந்த வீடியோவை இதுவரை 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.