நடுரோட்டில் டோல்கேட் ஊழியராக மாறிய யானை… தெறித்து ஓடிய மக்கள்.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ..!
இங்கு ஒரு யானை ரோட்டினை வழிமறித்து சென்று கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி உணவுகளை வாங்கி உட்கொண்டு வருகிறது. அப்போது அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகளின் வண்டியை வழிமறித்து நின்றது யானை. அதைப் பார்த்த ஓட்டுநர் தனது கையில் இருந்த வாழைப்பழத்தை அதற்கு கொடுத்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத நிலையில் யானை வண்டியின் மேல் இடித்து வண்டி சாய்ந்து நின்றது. பதறிப் போன சுற்றுலா வாசிகள் வண்டியில் இருந்து கீழ இறங்கி தெறித்து ஓடுகின்றனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது