பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
வாழ்வில் அனைத்துமே நாம் நினைத்ததுபோல் நடந்துவிடாது. அப்படி இருந்துவிட்டால் வாழ்க்கையிலும் சுவாரஸ்யமே இருக்காது அல்லவா? ஆனால் அனைவருக்குமே இங்கு வாழ்கை சராசரியாகவோ, சரி சமமாகவோ இருப்பது இல்லை. சிலருக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருக்காது. அவர்களிடம் கை நிறைய பணம் இருக்கும். ஆனால் விரும்பியதை வாங்கிச் சாப்பிடும் உடல் நிலை இருக்காது. அய்யோ ஸ்வீட் தொடாதீங்க. சர்க்கரை பாடர் லைன் தாண்டி மிரட்டுது என்பார்கள். என்னை டாக்டர் உப்பே தொடக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள் எனச் சொல்பவர்களையும்…